கிரிக்கெட்டில் ரூ. 55 லட்சம் பரிசுகளை வாரிக்குவித்த இளம் புயல்,15 வயது வைபவ் சூர்யவன்ஷி:,
ராஜஸ்தான் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, கிரிக்கெட் லீக் தொடரில் 776 ரன்கள் (72 சிக்சர், 63 பவுண்டரி, ஸ்டிரைக் ரேட் 237.30) குவித்து அசத்தியுள்ளார்.
வென்ற விருதுகளும் பரிசுகளும் (மொத்தம் ரூ. 55 லட்சம் + கார்):
- ஆரஞ்ச் கேப் (அதிக ரன்) – ரூ. 10 லட்சம்
- வளர்ந்து வரும் சிறந்த வீரர் – ரூ. 10 லட்சம்
- சூப்பர் ஸ்ட்ரைக்கர் – ரூ. 10 லட்சம்
- அதிக சிக்சர் – ரூ. 10 லட்சம்
- அதிக மதிப்புமிக்க வீரர் (MVP) – ரூ. 15 லட்சம்
பாராட்டு மழை: "இவரை அயர்லாந்துக்கு எதிரான இந்திய டி-20 அணியில் சேர்க்க வேண்டும்" என முன்னாள் தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் வலியுறுத்தியுள்ளார். மேலும், "சச்சின், கோலி, கபில் தேவ் போன்றவர்களின் ஆட்ட மனநிலை இவரிடம் உள்ளது; நூறாண்டுக்கு ஒருமுறை தோன்றும் வீரர்" என முன்னாள் வீரர் மதன் லால் பாராட்டியுள்ளார்.
0
Leave a Reply